ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி
தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார்.
ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் தில்லி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் சேர்க்க குஜராத் அணி 19 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சதம் (112* ரன்கள் 65 பந்துகளில்) அடித்து அசத்தினார்.
தில்லி கேபிடல்ஸ் அணி தோற்றாலும் கே.எல்.ராகுலின் பேட்டிங்கை பலரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி அணியின் மீட்டிங்கில் அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது:
நமது அணியில் ஒருவர் ஒரு போட்டியில் நம்.4இல் இடத்திலும் மற்றொரு அணியில் நம்.3 இடத்திலும் விளையாடுகிறார். முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
கே.எல்.ராகுல் ஒரு தரத்தினை அமைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். அதேபோல் அணியில் உள்ள ஒவ்வொருவரும் இந்தத் தரத்தில் விளையாட வேண்டும் என்றார்.
பின்னர் பயிற்சியாளர் கெவின் பீட்டர்சன் கே.எல்.ராகுலுக்கு பரிசை வழங்கினார்.
KLR, you gem pic.twitter.com/Lk0Wu1JaRq
— Delhi Capitals (@DelhiCapitals) May 20, 2025