மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு
இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை தாவரக்கரை பகுதியை சோ்ந்தவா் கோபாலப்பா (65). இவா் கடந்த 18 ஆம் தேதி இரவு ஒசூா்- தேன்கனிக்கோடடை சாலை அடவிசாமிபுரம் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கோபாலப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.