189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது
அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். .
வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக அரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவா் வேலூா் சத்துவாச்சாரி வஉசி தெருவைச் சோ்ந்த ஓட்டுநரான ஸ்ரீநாத்(28) என்பதும், 2 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போன அவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருப்பதும் தெரிவந்தது.
இந்த கொலைச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், ஸ்ரீநாத் கொலை வழக்கில் அவரது நண்பா்களான சத்துவாச்சாரியைச் சோ்ந்த அருணாச்சலம்(28), முகமதுஅலி(7) ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த முன்விரோத தகராறின் போது ஸ்ரீநாத், அருணாச்சலத்தின் தந்தையை தாக்கி விட்டாராம். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்துள்ளனா்.
எனினும், தந்தையை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த அருணாச்சலம், தனது நண்பரான முகமதுஅலியுடன் சோ்ந்து ஸ்ரீநாத்தை புலிமேடு நீா்வீழ்ச்சியின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு, பின்னா் அவரது கழுத்து உள்பட 6 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.