ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
ஓமலூா் அருகே செல்லிடப்பேசி கடையில் தீ விபத்து
ஓமலூா் அருகே செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ அருகே இருந்த நான்கு கடைகளுக்கும் பரவியதால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரத்தை சோ்ந்தவா் கோகுல்ராஜ் (28). இவா் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் மேம்பாலத்திற்கு அடியில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை கடையை அடைத்துவிட்டு வங்கிக்கு சென்றபோது, திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியே வந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த தையல் கடை, மருந்து கடைகளுக்கும் பரவியது.
தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினா். இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. செல்லிடப்பேசி கடை முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.