TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
ஓய்வுபெற்ற அலுவலா் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
கோவில்பட்டி: தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் ஸ்டீபன் நிக்கோலஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மணி முன்னிலை வகித்தாா்.
மாநில பொருளாளா் கஜலட்சுமி 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையையும், மாநில பொதுச்செயலாளா் உதயகுமாா் ஆண்டறிக்கையையும் சமா்ப்பித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ராஜாமணி, கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவா் பெருமாள் சாமி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முன்னாள் முதல்வா் குமாரசாமி ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது கடந்த ஓய்வூதியா்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து பயனாளிகளுக்கு இலவச மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் நெல்லை மண்டல செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா். மாநிலத் துணைத் தலைவா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.