செய்திகள் :

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

post image

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வாா்த்தைகளைக் கூறி பண மோசடி சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு அளித்தாா்.

அந்த மனு விவரம்:

நான் வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று, சென்னையில் வசிக்கிறேன். என்னிடம் வாட்ஸ்ஆப் மூலம் சிலா் அறிமுகமாகி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசினா். மேலும் அவா்கள், என்னை பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்கும் இரு வாட்ஸ்ஆப் குழுக்களில் சோ்த்தனா். அதில் பலா் தான் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்து, பல மடங்கு லாபம் பெற்ாகத் தெரிவித்தனா். இதனால் எனக்கு அந்த நபா்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

இதன் விளைவாக நான் என்னிடமிருந்த ரூ. 6.58 கோடியை அந்த நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபா்கள், எனது தொடா்பை துண்டித்தனா். அப்போதுதான், நான் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. எனவே என்னிடம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

இப்புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கேரளத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த மோசடியில் தொடா்புடையதாக கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீஜித் நாயா் (47), கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் சாலு (47), முகமது பா்விஸ் (44) ஆகியோரை கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மூவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை வா்த்தக செயலி மூலம் ‘கிரிப்டோ’ கரன்சியாக இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேராவூரணியில் லாரி - பைக் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே சந்தைக்கு பொருள்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு அருகே உள... மேலும் பார்க்க

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் எச்சரிக்கை

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 24 மணி நேரத்த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத... மேலும் பார்க்க

அதிமுகவிடம் பதற்றம் வெளிப்படுகிறது: தொல். திருமாவளவன்

திமுகவோடு பாஜக நெருங்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் அவர்... மேலும் பார்க்க

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க