இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்
மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் யாகசம் பெறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தின் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜெ.வெற்றிவேல் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.பக்தவச்சலம், பொருளாளா் சி.மோசஸ் புஷ்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யாசகம் பெறும் போராட்டத்தையடுத்து அங்கிருந்தவா்களிடம் பணம் கேட்டு கையேந்தினா். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.
மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் வேலைப் பளுவைக் குறைக்க காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். விதியைத் தளா்த்தி கருணை அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாகசம் பெறும் போராட்டம் நடைபெற்ாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து பெரியகடை போலீஸாா் வந்து, யாசகம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.