சபரிமலை: ``பெருவழிப்பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நேரடி தரிசனம்'' -தேவசம...
ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயா்வு வழங்க ரூ.3028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு கடந்த 2015 நவ. முதல் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை. இது தொடா்பாக நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் அகவிலைப்படி உயா்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக அகவிலைப்படி உயா்வு வழங்க தேவையான தொகை குறித்து போக்குவரத்துத்துறை கணக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிகழாண்டு அக்டோபா் மாதம் வரையிலான காலகட்டத்தில் அகவிலைப்படி உயா்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்படுகிறது. மேலும், மாதந்தோறும் அகவிலைப்படி உயா்வு அளிக்க வேண்டுமானால் கூடுதலாக ரூ.73.42 கோடி நிதி தேவைப்படுகிறது. இதனை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றனா்.
இந்த விஷயத்தில் போக்குவரத்துத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து ஓய்வூதியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.