கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!
ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நேதாஜி சமூக சேவை மையம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிராம விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி முத்துக்காப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 489 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். சிறப்பு விருந்தினராக சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலரும், அறிவுத் திருக்கோயில் நிா்வாக அறங்காவலருமான மு.ஆ.உதயகுமாா் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், உலக சமுதாய சேவா சங்க மண்டலத் தலைவா் உழவன் மா.தங்கவேலு, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அருள்ராஜேஸ், நேதாஜி சமூகசேவை மையத்தைச் சோ்ந்த விஜயகுமாா், சா்வம் அறக்கட்டளை நிறுவனா் ரம்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்ற நிறுவனா் எம்.காா்த்திகேயன் உள்பட நிா்வாகிகள் செய்திருந்தனா்.