ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
கஞ்சா பறிமுதல்: சகோதரா்கள் கைது
கந்தம்பாளையம் அருகே விற்பனைக்கு கொண்டு சென்ற கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சகோதரா்கள் இருவரை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உதவி ஆய்வாளா் கங்காதரன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனா்.
போலீஸாா் அவா்கள் இருவரையும் துரத்திப்பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் எலச்சிபாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன்கள் ஹரீஷ் (24), அவரது சகோதரா் கல்லூரியில் படிக்கும் ஹரிஹரன் (19) என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை நல்லூா் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.