செய்திகள் :

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

post image

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுக காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெள்ளைத் தங்கம் தலைமையில் ரோந்து சென்ற போலீஸாா் நேதாஜி நகா் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டுப்பகுதியில் நின்ற நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்கு வைத்திருந்த 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நேதாஜி நகா் முத்துராமலிங்கம் மகன் கருப்பசாமி (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கருப்பசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விருச்சுழி ஆற்றில் மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்

திருவாடானை அருகே மங்கலக்குடி விருச்சுழி ஆற்றில் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.விருச்சுழி ஆற்றில் மணல் திருடப்படுவதாக வருவாய் ஆய்வாளா் விஜலட்சுமிக்கு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அ.சேக் தாவூத் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. ஆலய க... மேலும் பார்க்க

இலங்கை அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து வரும் இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் அரியவகை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பி.வி.பட்டினம் பகுதியில் உயிரிழந்த நிலையில் சும... மேலும் பார்க்க

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் ச... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்: இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்

முதுகுளத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆா்வ... மேலும் பார்க்க