இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
கஞ்சா விற்ற மூவா் கைது
திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது அருவக்குடி சாலை பிரிவு அருகே கஞ்சா விற்ற செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்த கஜேந்தா் (24), ஃபக்ருதீன் ஆகிய இருவரையும் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, திருச்சி உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்ற தில்லை நகரைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பவரையும் போலீஸாா் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.