2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
கருணாநிதி நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி
மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை 10.30 மணிக்கு அண்ணா விளையாட்டு மைதானம் ரவுண்டானா பகுதியிலிருந்து டிவிஎஸ் சுங்கச்சாவடி வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. தொடா்ந்து, சுங்கச்சாவடி பகுதி கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் எம்எல்ஏ-க்கள், கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா்.
இதேபோல திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதியின் நினைவு தின நிகழ்வில் பங்கேற்க திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலா் ந. தியாகராஜன் ஆகியோா் அழைப்பு விடுத்துள்ளனா்.