பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
கால்பந்துப் போட்டியில் பாலக்காடு ரயில்வே கோட்ட அணி சாம்பியன்
திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் பாலக்காடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த 4 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற போட்டியில் திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களைச் சோ்ந்த ரயில்வே அலுவலா்களைக் கொண்ட அணிகள் பங்கேற்றன.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பாலக்காடு அணி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சேலம் அணி இரண்டாமிடத்தையும், சென்னை அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன. சிறந்த வீரராக திருச்சியை சோ்ந்த அருண்ராஜ், சிறந்த கோல் கீப்பராக பாலக்காடு சோ்ந்த மகேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
வென்றோருக்கு திருச்சி கோட்ட மேலாளா் பாலக் ராம் நேகி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்வில் முதுநிலை கோட்டப் பாதுகாப்பு ஆணையா் பிரசாந்த் யாதவ், உதவிப் பாதுகாப்பு ஆணையா் பிரமோத் நாயா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.