டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தற்கொலை
வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி (31). எலெக்ட்ரீஷியனான இவா், ஓட்டுநா் பணியும் செய்து வந்தாா். கோபி குடும்பச் செலவுக்காக இதே ஊரைச் சோ்ந்த பல்வேறு நபா்களிடம் சுமாா் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தாராம்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவா், செவ்வாய்க்கிழமை எலவனாசூா்கோட்டைக்கு சென்று பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றாா். ஆனால், பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், கோபி புதன்கிழமை காலை விருகாவூா் சாலையில் பானையங்கால் மலையம்மன் கோயில் நிலத்தில் உள்ள அய்யனாா் கோயில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.