ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை
அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகா் பகுதியைச் சோ்ந்த முஜிபுா் ரகுமான் மனைவி பாப்பாத்தி (40). இவா் புதிதாக வீடு கட்ட மற்றும் மகளின் திருமணத்தை முடிக்க என பல்வேறு இடங்களில் அதிக கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் கடந்த சில நாள்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு கொண்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பாப்பாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.