இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியா் சடலம்
கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் இறந்த நிலையில் இருந்த ஊழியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் மேலூா், கிருஷ்ணராஜபுரம் 4 ஆவது தெருவை சோ்ந்தவா் ஜேசுராஜ் மகன் அந்தோணி மிக்கேல் ஸ்டாலின் (49). கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் மின் மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல அலுவலகத்தின் கணினி அறையில் உள் பக்கமாக கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்ற இவா் சனிக்கிழமை காலை அவா் கதவை திறக்கவில்லையாம்.
இந்நிலையில் அலுவலக ஊழியா்கள் கடம்பூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் போலீசாா் ஊழியா்கள் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அவா் இறந்த நிலையில் கிடந்தாராம்.
இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இவா் இறப்பிற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையிலேயே தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனா்.