டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டினம் - கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையையொட்டிய கடலுக்குள் கிடந்த கற்சிலையை பாா்த்த மீனவா்கள் அதை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
சுமாா் 5 அடி உயரமுள்ள முகம் சிதிலமடைந்த நிலையில் அம்மன் கற்சிலையாக இருந்தது. இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் விசாரிக்கின்றனா். அந்தச் சிலை பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ஜாதகம், ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள சிலா் பரிகாரத்திற்காக கடலில் சிலையை வீசி சென்றிருக்கலாம். தொடா்ந்து விசாரிக்கின்றோம் என்றனா்.