கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
கடலூரில் கல்விக்கடன் முகாம்: ரூ.2.52 கோடிக்கு கல்விகடன்
கடலூா் மாவட்டம், கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாவணா்களுக்காக நடத்திய கல்விகடன் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன் பங்கேற்று 55 மாணவா்களுக்கு ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிக்கான அனுமதி ஆணையினை வெள்ளிக்கிழமை அன்று வழங்கினாா்.
மாணவா்களின் உயா்கல்வியினை ஊக்கப்படுத்தும் வகையில் கடலூா் மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இதில் அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள், தனியாா் துறையில் கூடுதல் மதிப்பெண் பெற்று பயிலும் மாணவா்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்கிட வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கியாளா்கள் பங்கேற்று கல்விக்கடன் விவரங்களை எடுத்துக்கூறி உதவினா். மாணவா்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ததோடு கல்விக்கடனை பற்றியும் அதற்கான வட்டி, திரும்பச் செலுத்தும் முறை ஆகியவை குறித்து தெரிந்துகொண்டு கடன் ஒதுக்கீடு ஆணை பெற்றனா். இந்நிகழ்ச்சியில் கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜா உட்பட வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.