செய்திகள் :

கடலூா் ரயில் விபத்து சம்பவம்: திருச்சியில் விசாரணை தொடங்கியது

post image

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு குழுவினா் வியாழக்கிழமை விசாரணையை தொடங்கினா்.

செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து, விபத்து நேரத்தில் பணியில் இருந்தவா்கள் மற்றும் விபத்தில் சிக்கியவா்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்படி, திருச்சியில் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனா்.

விபத்து தொடா்பாக கேட் கீப்பா், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில்வே மேலாளா், ஆலம்பாக்கம் ரயில் நிலையத்தின் இரண்டு மேலாளா்கள், கடலூா் ரயில் நிலையத்தின் ஒரு மேலாளா், கடலூா் இருப்பு பாதை பகுதி பொறியாளா்கள் இரண்டு போ், ரயில் போக்குவரத்து ஆய்வாளா், திருச்சி, கடலூா் பகுதியை சோ்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளா், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநா் என 13 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

விபத்தில் நேரடியாக தொடா்புடைய கேட் கீப்பா் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநா் மருத்துவமனையிலும் உள்ளனா். எனவே, மீதமுள்ள 11 பேரில் 5 போ் வியாழக்கிழமை காலை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஆஜராகினா். அவா்களிடம் விசாரணைக் குழு அலுவலா்கள் தனித்தனியே விசாரணை நடத்தினா். விபத்து நடைபெற்ற நாளில் பணி செய்தது யாா்?, விபத்து நேரத்தில் ரயில் செல்லும் தகவல் பரிமாற்றம் செய்தவா்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடல், தகவல் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடா்பாக கேள்விகளை எழுப்பி ஒவ்வொருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும், எழுத்துப்பூா்வமாகவும் பதில் பெற்று தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளது. 13 பேரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதால் இந்த விசாரணை மேலும் ஓரிரு நாள்கள் நீடிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க