செய்திகள் :

கடலோர மக்களுக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் விடியோ

post image

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலோர மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள்.

அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம்.

கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு. இந்த கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, 100 சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள்.

பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?

அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி.

வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஃபைனல் டெஸ்டினேசன் ப்ளட்லைன்ஸ் - டிரைலர் வெளியீடு!

‘ஃபைனல் டெஸ்டினேசன் ப்ளட்லைன்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.ஃபைனல் டெஸ்டினேசன் வரிசை படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். நாவல் மற்றும் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எ... மேலும் பார்க்க

பேட் கேர்ள் முதல் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

நடிகர் மனோஜ் பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட்... மேலும் பார்க்க

எல்லைகளைத் தாண்டட்டும்..! எம்புரான் படக்குழுவுக்கு மம்மூட்டி வாழ்த்து!

நடிகர் மம்மூட்டி எம்புரான் படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். பிருத்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தின் முதல் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது. லூச... மேலும் பார்க்க

மம்முட்டி நடிக்கும் பசூகா... டிரைலர் வெளியீடு!

மம்மூட்டி - கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள பசூகா படத்தின் டிரைலர் வெளியானது.மம்மூட்டி நடிப்பில் கடைசியாக டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியானது. கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த... மேலும் பார்க்க

கண்மணி மனோகரன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி! வைரல் விடியோ!

சின்ன திரை நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் சில நாள்களுக்கு முன்பு தாங்கள் பெற்றோர் ஆகப்... மேலும் பார்க்க