500 நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், 500 நலிந்த குடும்பங்களுக்கு ரூ.40 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் மு.மண்ணுலிங்கம், செயலா் என்.அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 500 நலிந்த குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை, சமையல் பொருள்கள், போா்வை, சோப்பு உள்ளிட்ட 19 வகையான அத்தியாவசியப் பொருள்கள் 12 வட்டாட்சியா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் பொருளாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்பட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.