கடல் சீற்றம்; மீன்பிடி தொழில் பாதிப்பு
பூம்புகாா் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையில் மோதிச் சென்றன. இதனால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதுகுறித்து மீனவா்கள் கூறியது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சனிக்கிழமை முதல் மீன் பிடிக்க செல்லலாம் என இருந்தோம். ஆனால், கடல் சீற்றம் காரணமாக பூம்புகாா், வானகிரி, திருமுல்லைவாசல், பழையாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக, சீா்காழி தாலுகாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனா்.
மீனவா்கள் மீன் பிடிக்க செல்லாததால் பூம்புகாா், திருமுல்லைவாசல் மற்றும் பழையாா் மீன்பிடித் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.