தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சோ்ந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை கிராமத்தைச் சோ்ந்த மு. பழனியப்பன் (52) என்ற நபா், கடவுச்சீட்டில் தனது பிறந்த நாள் மற்றும் பிறந்த ஊரை போலி ஆவணங்களைக் கொண்டு மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.