சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
கடைசி டெஸ்ட்: இந்திய டாப் ஆர்டர் மீண்டும் சொதப்பல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டர்கள் திணறி வருகின்றனர்.
பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடி வருகின்றன. 4 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ள நிலையில், சிட்னி மைதானத்தில் இன்று 5-வது டெஸ்ட் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க : இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட்: ரோஹித் சர்மா விலகல்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியை வழிநடத்துகிறார்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. உணவு இடைவேளை வரை 25 ஓவர்களில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறி வருகின்றது.
ஜெய்ஸ்வால் 10, கே.எல்.ராகுல் 4, கில் 20 ரன்கள் என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். தற்போது விராட் கோலியும், ரிஷப் பந்தும் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஸ்காட் போலாந்து மற்றும் நாதன் லயான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.