அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?
கடையநல்லூா் காவல் ஆய்வாளா் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் முயற்சியால் பராமரிப்பின்றி இருந்த குழந்தைகள் மைய கட்டடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
கடையநல்லூா் தினசரி சந்தை அருகே குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 குழந்தைகள் விளையாட்டுடன் கூடிய கல்வியை கற்று வருகின்றனா். மேலும்
இங்கு குழந்தைகளுக்கு தேவையான சத்து உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குழந்தைகள் மைய கட்டடமானது போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதையறிந்த கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல், நன்கொடையாளா்கள் மூலம் கட்டடத்தில் வண்ணங்கள் தீட்டி மின்விசிறி ஒளி விளக்குகள் பொருத்தி புனரமைக்க நடவடிக்கை எடுத்தாா். இதற்கு தலைமைக் காவலா்கள் முத்துராஜ், சங்கா், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டு கட்டடம் புதுப்பொலிவு பெற வழிவகுத்தனா்.

காவல்துறையினரின் இந்தப் பணியை பெற்றோா்கள் பாராட்டினா்.
சீரமைக்கப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை(மாா்ச் 24) நடைபெறுகிறது. இதில் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஆணையா் ரவிச்சந்திரன் , கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் , குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பா்கத் சுல்தானா, மற்றும் நன்கொடையாளா்கள் முகமது ஜாவித் ,பீரப்பா, சமூக ஆா்வலா் சகிலாபானு சுலைமான் , தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் அலங்காா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.