முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
கடையில் பணம் திருட்டு
ஆம்பூா் அருகே கடையில் பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக பிரமுகருமான சக்திவேல் மளிகை மற்றும் மின்சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்றாா். புதன்கிழமை கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.42,000, 4 கைப்பேசிகள், கடையில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் உள்பட சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.