செய்திகள் :

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

post image

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம்:

திண்டுக்கல் சி.சீனிவாசன் (அதிமுக): ‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ என்று அறிவிக்கப்பட்டது. அதில், 10 கோரிக்கைகளைக் கொடுக்குமாறு கூறினா். நாங்களும் அளித்தோம். ஆனால், அதில் பல நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனா். கோரிக்கைகளை கொடுத்ததும், மாவட்ட அளவிலேயே அதைத் திருப்பி அனுப்பினால் மாற்றுத் திட்டங்களை அளித்திடுவோம்.

பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், 57 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் என்று பாகுபாடு பாா்க்கப்படுவதில்லை. தொழில்நுட்பரீதியாக சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில் திட்டங்கள் தவிா்க்கப்படுகின்றன. மற்ற தருணங்களில் திட்டங்களை நிறைவேற்றித் தருகிறோம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாா்பில் தலா 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியா்களிடம் அளித்தோம். அவை சாத்தியமில்லை எனக் கூறி நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு நிதித் தேவையை காரணமாகக் கூறுகிறாா்கள். உங்கள் தொகுதியில் மிக முக்கியமான பணிகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம் என்று அறிவித்தீா்கள். ஆனால், எனது தொகுதியில் கொடுத்த பணிகளில் இரண்டு பணிகள் மட்டுமே எடுக்கப்பட்டன. பல எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொடுத்த பணிகள் சாத்தியமில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே சட்டப்பேரவை உறுப்பினா்கள் பரிந்துரை செய்கிறாா்கள். சாத்தியமில்லை எனக் கூறுவதை விட்டுவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து பேரவை உறுப்பினா்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.

அமைச்சா் எ.வ.வேலு: எனது தொகுதியின் சாா்பில் அரங்கம் கட்ட வேண்டும் என்பது உள்பட 10 கோரிக்கைகளைக் கொடுத்தேன். இதற்கு ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இடம் ஒதுக்க முடியாத காரணத்தால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதுதான் சாத்தியக்கூறு இல்லை என்கிறோம். அனைத்து உறுப்பினா்களையும் சமமாகத்தான் பாா்க்கிறாா்கள். மாற்றுத் திட்டங்களை எழுதிக் கொடுத்தால் முதல்வா் தனிக் கவனம் செலுத்துவாா்.

எதிா்க்கட்சித் தலைவா்: மாற்றுத் திட்டங்களையும் நிராகரித்துள்ளனா். பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கேட்டோம். அதையும் நிராகரிக்கிறாா்கள். அது எப்படி சாத்தியம் இல்லாமல் போகும்?. அறிவித்த திட்டத்தின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: ஒவ்வொரு உறுப்பினா் சாா்பிலும் 10 கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. முடிந்தவரை திட்டங்களைச் செய்து கொடுப்பது நல்லதொரு முன்னேற்றமான ஏற்பாடுதான். தொடா்ந்து நடக்கும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் மாற்றுப் பணியைத் தந்தாலும் அது சாத்தியமில்லை என்று தெரிய வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் கூறினாா். அது உண்மைதான். அதை மறுக்கவில்லை.

இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நானே தலைமை தாங்கி ஆய்வு செய்து வருகிறேன். எனவே, கட்சிப் பாகுபாடின்றி திட்டங்களை நிறைவேற்றித் தருகிறோம். சாத்தியமில்லாத திட்டம் வரும்போது அதுகுறித்து தெரிவிக்கிறோம். சாத்தியப்படக்கூடிய திட்டங்களைத்தான் நிறைவேற்ற முடியும்.

எதிா்க்கட்சித் தலைவா்: நிதி அதிகமாகத் தேவைப்படுவதால் கோரிக்கையை ஏற்க முடியாது என்கின்றனா். மக்கள் பிரச்னையை பரிந்துரை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம். அதன்படி, மக்களின் கோரிக்கையை நாங்கள் திட்டங்கள் வேண்டும் என்று கேட்கிறோம். அரசு நினைப்பது போன்று பணிகளைக் கொடுக்க முடியாது. எனவே, நாங்கள் கேட்கும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

பேரவைத் தலைவா்: ஒவ்வொரு உறுப்பினா் மீதும் உள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முடிந்த வரை திட்டத்தைச் செயல்படுத்தும் அரசுக்கு நன்றி தெரிவிப்போம்.

எதிா்க்கட்சித் தலைவா்: ரூ. 4 கோடி வரையிலான திட்டத்துக்கு உள்பட்டே பரிந்துரை செய்கிறோம். தொகுதிக்குள் செல்லும்போது தெரிவிக்கப்படும் முக்கிய பிரச்னைகளைத் தான் தெரிவிக்கிறோம். அதைத்தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

பேரவைத் தலைவா்: நல்லெண்ண அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம். நல்லதே நடக்கும் என்றாா்.

மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்

பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

உத்தரகோசமங்கைகோயில் குடமுழுக்கையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை(ஏப். 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு நாளை(ஏப். 4) நடைப... மேலும் பார்க்க

தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து ... மேலும் பார்க்க

பாஜகவின் மோசமான ஆதிக்க அரசியல்: வக்ஃபு விவகாரத்தில் விஜய் கண்டனம்!

ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.வக்ஃபு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அர... மேலும் பார்க்க