செய்திகள் :

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

post image

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, அம்மாநில முதல்வராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், தில்லியில் கடந்த பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கடந்த வாரம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று(பிப். 11) ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பார்தாப் சிங் பாஜ்வா ஆம் ஆத்மி கட்சிக்குள் உள்கட்சி பூசல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் கங்கிரஸுடன் தொடர்பிலிருப்பதாகக்” கூறினார்.

இன்னொருபுறம், ஆம் ஆத்மி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ள பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய பகவந்த் மான், “காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலங்களில் தாங்கள் இருக்கும் கட்சியைவிட்டு இன்னொரு கட்சியில் சென்றிணைந்து கொண்ட வரலாறு உண்டு. கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்; அப்படியிருக்கையில், அவர்கள் தங்களைப் பற்றி கவலைப்படாமல் பிறரைக் குறித்து விமர்சிக்கின்றனர்.

தில்லியில் காங்கிரஸுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் பார்தாப் சிங் பாஜ்வா பஜ்வா இதுபோன்ற விமர்சனங்களை கடந்த காலங்களிலும் முன்வைத்துள்ளார். அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டேயிருக்கட்டும்.

நாங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இரத்தமும் வியர்வையும் சிந்தி இக்கட்சியை உருவாக்கியுள்ளோம்.

தில்லி மக்களுக்கு இன்னும் எங்கள் மீது பாசமிருப்பது வெளிப்படுகிறது. தில்லி மாடல் நிர்வாகத்தை பஞ்சாபிலும் செயல்படுத்தியுள்ளோம். பஞ்சாபில் 17 சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களால் தினசரி ரூ. 62 லட்சம் சேமிக்க முடிகிறது.

பஞ்சாபை மாநிலத்தையொரு முன்மாதிரி மாநிலமாக மாற்றி ஒட்டுமொத்த தேசத்துக்கும் எடுத்துக்காட்டாக மற்றுவோம்.

இனி வரும் நாள்களில் மகளிருக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இது மக்களின் பணம், அதனை மக்களுக்காகவே செலவழிக்கிறோம்” என்றார்.

மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌா்ணமி புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது. இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

உரையை முடித்தவுடன் எம்.பி.க்கள் வெளியேறும் விவகாரத்தில் விரைவில் உத்தரவு: ஜகதீப் தன்கா்

மாநிலங்களவையில் தங்களது உரையை முடித்தவுடன் எம்.பி.க்கள் வெளியேறும் விவகாரத்தில் நடப்பு கூட்டத்தொடா் நிறைவடைவதற்குள் உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீா்- அமித் ஷா உறுதி

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக தில்ல... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழப்பு: மக்களவையில் விசாரணை கோரிய எம்.பி. ரஷீத்

‘ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் பொது மக்கள் 2 பேரின் சந்தேக உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்’ என்று அத்தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கையை முன்வைத்தா... மேலும் பார்க்க

கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு

‘வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவா்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு த... மேலும் பார்க்க

இணைய குற்ற வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அமித் ஷா

‘இணைய மோசடி மூலம் திருடப்படும் பணத்தை இணைய குற்றவாளிகள் சேமித்து வைக்கும் வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க