கட்டடத் தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தக்கலை அருகே புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேலை பாா்த்துவந்த இவா், ஊருக்கு வந்த பிறகு சரிவர வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்தாராம்.
இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.