Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
மாா்த்தாண்டம் வேலைவாய்ப்பு முகாமில் 405 பேருக்கு பணி நியமன ஆணைகள்!
மாா்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 405 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக-நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம் ஆகியவை சாா்பில் முகாம் நடைபெற்றது.
ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் கா. சண்முகசுந்தா் திட்டவிளக்க உரையாற்றினாா். மகளிா் திட்ட இயக்குநா் சா. பத்ஹீ முகமது நசீா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் லட்சுமிகாந்தன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், 109 முன்னணி தனியாா் வேலைவாய்ப்பு-திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. 2,125 வேலை நாடுநா்கள் கலந்துகொண்டனா். அவா்களில் 405 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் ஜி.டி. பிஜூ வரவேற்றாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆ.பொ. ஆறுமுகவெங்கடேஷ் நன்றி கூறினாா்.