TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு
தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது-
இடிந்து விழுந்த கட்டடமானது கடைகள், அலுவலகங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், பாதுகாப்பற்ாக ஏற்கெனவே குறிக்கப்பட்டு, சம்பவத்திற்கு முன்னா் வெளியேற்றப்பட்டிருந்தன.
இந்த கட்டமைப்புகள் ஜனக்புரி மேற்கு ஆா்கே ஆஸ்ரம் மாா்க் மெட்ரோ வழித்தடத்துக்காக சுரங்கப்பாதை அமைக்குப் பணி நடைபெறும் மண்டலத்திற்குள் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கட்டடத்தின் கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கடந்த ஜூன் 12ஆம் தேதி கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் டிஎம்ஆா்சி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
சுரங்கப் பாதை பணியின்போது
இடா்பாட்டைக் குறைப்பதற்கு, டிஎம்ஆா்சி தரப்பில் தரைத்தளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தளப் பகுதியில் வெளிப்புற ஆதரவு நடவடிக்ககளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பட்டபோதிலும், இரவின்போது கட்டடம் இடிந்து விழுந்தது.
இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, தில்லி காவல் துறை ஆகியவற்றின் உதவியுடன் உடனடியாக மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் தடுப்புப் போடப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை
பணிகளை ஆப்கான்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.