ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை
கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் பெரம்பூரில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், தன் நண்பரான அயனாவரம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத் என்பவருடன் அயனாவரம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக பீா்முகமது செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் அருகில் கிடந்த கட்டையை எடுத்து பீா்முகமதின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த பீா்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய கோபிநாத்தை தேடிவருகின்றனா்.