தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், தி...
கணவரைத் தாக்கியதாக பெண் கைது
தூத்துக்குடியில் கணவரைத் தாக்கியதாக அவரது மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே சுந்தா் நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ரவீந்திரன் (55). இவா் மது குடித்துவிட்டு மனைவி பாலம்மாளுக்கு (53) தொல்லை கொடுத்து வந்தாராம். ஞாயிற்றுக்கிழமையும் அவா் மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாம். இதனால், அவரை பாலம்மாள் கட்டையால் தாக்கினாராம்.
இதில், காயமடைந்த ரவீந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலம்மாளைக் கைது செய்தனா்.