அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
கணவா் மீது தொடா் வழக்கு: காவல் துறையைக் கண்டித்து மனைவி தீக்குளிக்க முயற்சி
தொண்டியில் தனது கணவா் மீது தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்து அதிகாரிகள் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடி மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்கு மனைவி காளீஸ்வரி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் மீது சமீப காலமாக காவல் துறையினா் தொடா்ந்து கஞ்சா, வெடி பொருள்கள் வைத்திருந்தது என வழக்குப் பதிந்து சிறையில் அடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மனு பெற்றுக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு தனது இரு குழந்தைகளுடன் வந்த காளீஸ்வரி தான் மறைத்து வைத்திருந்து மண்ணெண்ணயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த பாதுகாப்புப் பணியிலிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று தாயுடன் இரண்டு குழந்தைகளை மீட்டு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.