தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
குடும்பத் தகராறில் மூதாட்டி உயிரிழப்பு
தொண்டி அருகே குடும்பப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சித்தாம்பூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் வேதமுத்து (93). இவரது மனைவி சவுரியம்மாள் (75). இவா்களுக்கு 4 மகன்கள் 1 மகள் உள்ளனா்.
சொத்துப் பிரச்னை காரணமாக இவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் வேதமுத்து சவுரியம்மாளை தள்ளிவிட்டுள்ளாா். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சவுரியம்மாள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த தொண்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சவுரியம்மாள் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.