ஷுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால்...: பத்ரிநாத் விமர்சனம்!
கண்டியாநத்தம் ஊராட்சியில் மாணவா்கள், பணியாளா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் 3 இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி முருகேசன் தலைமையில் கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கேசராபட்டி தொடக்கப் பள்ளி, க.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 3 இடங்களில் நடைபெற்ற முகாமில் பள்ளி மாணவ மாணவிகள், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியா்கள் சுபத்ரா, மணிமேகலை, மீனாட்சி மற்றும் ஊராட்சி செயலாளா் அழகப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.