செய்திகள் :

``கண்ணீர் வேண்டாம் தம்பி'' - கைகள் இன்றி +2 தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு முதல்வர் மருத்துவ உதவி

post image

+2 மாணவ, மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது. இதில் மாநில அளவில் மொத்தம் 4,05,472 (96.70%) மாணவிகளும், 3,47,670 (93.16%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளில் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாவட்ட அளவில், அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

+2 தேர்வில் தேர்ச்சி பெட்ரா மாணவிகள்
+2 தேர்வில் தேர்ச்சி பெட்ரா மாணவிகள்

தேர்ச்சி மாணவர்களுக்கு வாழ்த்துகளும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஊக்கமும் அளித்த முதல்வர் ஸ்டாலின், "பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்!" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மாணவர் கீர்த்திவர்மா

இவ்வாறிருக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் இரு கைகள் இன்றி 471 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து உதவினால் நன்றாகப் படித்து தன்னைப் போன்று இருப்பவர்களுக்கு உதவ முடியும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

கீர்த்திவர்மாவின் கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலானது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, "கண்ணீர் வேண்டாம் தம்பி! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்." என்று மாணவர் கீர்த்திவர்மாவுக்கு உறுதியளித்திருக்கிறார்.

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க

`விமான நிலையங்களில் தீவிர சோதனை; பார்வையாளர்கள் வருகைக்கு தடை..' - பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்திய... மேலும் பார்க்க

`கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

பாகிஸ்தானின் அதிவேக சூப்பர்சோனிக் விமானமான F-16போர் விமானத்தை இந்தியாவின் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?

Doctor Vikatan:மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்... சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே.... மேலும் பார்க்க

காஷ்மீர் மக்களை காத்து நிற்கும் `S-400 சுதர்சன் சக்ரா' அதிநவீன பாதுகாப்பு பற்றி தெரியுமா?

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் வான்வழி தாக்குதலை நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ப... மேலும் பார்க்க

இரவில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்; ஜம்மு காஷ்மீரில் ஒலித்த அபாய சைரன்; இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க