செய்திகள் :

கண்மணி - அஷ்வத் தம்பதியின் குழந்தை பெயர் தெரியுமா?

post image

கண்மணி - அஷ்வத் தம்பதியினர் அவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவினை நடத்தியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.

அந்தத் தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா உள்ளிட்ட பல்வேறு பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் அஷ்வத்தை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் உற்றார் உறவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள் இருவரும், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை சமூக ஊடங்களில் பதிவிடுவது வழக்கம்.

தாங்கள் கருவுற்று இருப்பதாக கண்மணி - அஷ்வத் தம்பதியினர் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இவர்களுக்கு ஜூன் 9 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அண்மையில் இவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. விழாவினை விமர்சையாக கொண்டாடிய இவர்கள் , ’துருவ் யாத்ரா அஷ்வத்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

இதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளனர். கண்மணி - அஷ்வத் தம்பதியினரின் குழந்தைக்கு ரசிகர்கள், சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Kanmani and Ashwath couple held a naming ceremony for their child.

இதையும் படிக்க: மீண்டும் சின்ன திரையில் ஸ்மிருதி இரானி!

96, மெய்யழகன் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய விருப்பம்: பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் 96, மெய்யழகன் ஆகிய படங்களை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா: பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு!

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாயன்மார்கள் 63-இல் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையை விளக்க... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்து... மேலும் பார்க்க

விம்பிள்டன் நாயகன்: ரோஜர் ஃபெடரரை முந்தி சாதனை படைத்த ஜோகோவிச்!

விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச் 14-ஆவது முறையாக அரையிறுதிக்குத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடர்ந்து புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள்.... மேலும் பார்க்க

வரலாற்று நாயகன்: ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். ... மேலும் பார்க்க