கண்மணி மனோகரன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி! வைரல் விடியோ!
சின்ன திரை நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் சில நாள்களுக்கு முன்பு தாங்கள் பெற்றோர் ஆகப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சின்ன திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கொண்டாடும் விதமாகவும் இவர்களின் திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் ஆனதைக் கொண்டாடுவதற்கும் சிங்கப்பூர் சென்றனர். சிங்கப்பூர் சென்று இவர்கள் பதிவிட்ட விடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், கண்மணி மனோகரன் கருவுற்று இருப்பதால், அவருடைய வீட்டில் எளிமையான முறையில் பூச்சூட்டு விழா நடைபெற்றுள்ளது. இது தொடர்பான விடியோவை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ளார்.
"எங்கள் இதயங்களின் இருந்த ரகசியம், தற்போது உலகம் பார்க்கும்படி மலர்ந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை கண்மணி மனோகரன், தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமியும், மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
இதனிடையே ஜிஷ்ணூ மேனன், தேஜஷ்வினி நடிக்கும் புதிய தொடரில் இணைந்த கண்மணி மனோகரன், திடீரென விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.