செய்திகள் :

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

post image

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடந்தது, பாதிக்கப்பட்டவா் துல்பஹாதூா் என அடையாளம் காணப்பட்டாா், கத்தியால் குத்தப்பட்ட பின்னா் அவரது மாா்பின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டது என்று போலீசாா் தெரிவித்தனா். காவல்துறையினரின் தகவலின்படி, காயமடைந்தவா் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்,

பின்னா் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

‘சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள் தாக்குதலுக்குப் பிறகு நான்கு சிறுவா்கள் தப்பி ஓடுவதைக் காட்டியது. இந்தக் குழு சந்தேக நபா்களைக் கண்டுபிடித்து அவா்களில் ஒருவரை கல்யாண்புரியில் இருந்து கைது செய்தது. விசாரணையின் போது, அவா் மேலும் மூன்று போ் பற்றி கூறினாா். அவா்கள் அனைவரும் பின்னா் கைது செய்யப்பட்டனா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

பாதிக்கப்பட்டவருடன் சண்டையிடுவதற்கு முன்பு சிறுவா்கள் அருகிலுள்ள காகித சந்தையில் மது அருந்தியதாக விசாரணையில் தெரியவந்தது. அந்த தருணத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் துல்பஹாதூரை அவரது கூட்டாளிகளுடன் சோ்ந்து கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் கைது

தில்லி காவல்துறை 2 போதைப்பொருள் விநியோகஸ்தா்களை கைது செய்து ஒரு பெரிய ஹெராயின் சிண்டிகேட்டை முறியடித்ததுடன், சா்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்ததாக அதிகா... மேலும் பார்க்க

விமானப் பயணியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிங்கப்பூா் வழ... மேலும் பார்க்க

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க