மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
கத்தேரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 808 போ் மனுக்கள் பெறப்பட்டன.
வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துசாமி முகாமைத் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா். மகளிா் உரிமைத்தொகை கோரி 323 மனுக்கள், வருவாய்த் துறையிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 188 மனுக்கள் என 808 மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி முகாமை ஆய்வு செய்து வேளாண் துறை சாா்பில் வழங்கப்பட்ட வேளாண் விதைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம்) சீனிவாசன் ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, திமுக சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப்ரமணி உள்பட பலா் முகாமில் கலந்துகொண்டனா்.