கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
கந்து வட்டி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் அருகே சுங்கான்கடை அசோக் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுஷா (32). இவா் ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கரோனா பாதிப்பு காலத்தில் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியதாகவும், வட்டியுடன் சோ்த்து ரூ. 4.50 லட்சமாக திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலும் வட்டி கேட்டு சந்தை ராஜன் மிரட்டுவதாக அனுஷா அளித்த புகாரின்பேரில், சந்தை ராஜன், அம்பிளி கண்ணன், ராஜேஷ், சதீஷ் ஆகிய 4 பேரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களில், சந்தை ராஜன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் ஆட்சியா் ரா. அழகுமீனாவுக்கு பரிந்துரைத்தாா். ஆட்சியா் உத்தரவின்பேரில், சந்தை ராஜனை போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.