‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
கனமழை எச்சரிக்கை: கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் என்னென்ன..?
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை ஆணையம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்துக்கு படைவீரா்களை அனுப்பக் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து படையின் கமாண்டண்ட் அகிலேஷ்குமாா் உத்தரவின்பேரில், கோவை மாவட்டத்துக்கு ஒரு குழுவும், நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு குழுவும் வந்து சேர்ந்தனர். மேலும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் நீலகிரிக்கு மூன்று குழுக்களும் கோவைக்கு இரு குழுக்களும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரு குழுவும் வந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக்கினார்.
கோவை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மழையை எதிர்கொள்ளவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நாளை கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை
அதன்படி,
* அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள வால்பாறை, டாப்ஸ்லிப் பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* கோவை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* வால்பாறையில் உள்ள அரசுக் கல்லூரியில் தற்காலிக மீட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
* 43 ஜெனரேட்டர்கள், 100 ஜேசிபி இயந்திரங்கள், 50 தண்ணீர் லாரிகள், மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
* வாய்க்கால்கள் தூர் வாரும் பணி 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
* மக்கள் பவானி ஆற்றங்கரைக்குச் செல்வது, நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* மாவட்ட சார்பிலும், மாநகராட்சியில் மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர் என ஆட்சியர் கூறினார்.