செய்திகள் :

கனமழை: 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை!

post image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், அடுத்த 6 நாள்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதிகனமழையை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி, மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யாா், யாரிடம் பேசினாா் என்ற ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை செ... மேலும் பார்க்க

ஜூலை 5-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சாா்பில் ஜூலை 5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் த... மேலும் பார்க்க

4 நாள் பயணமாக தில்லி சென்றாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றாா். ஒரே வாரத்தில், 2-ஆவது மு... மேலும் பார்க்க