செய்திகள் :

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மது குடிக்கச் சென்றிருக்கிறார். பூட்டிக்கிடந்த ஒரு கடை அருகே மது குடிப்பதற்காக அமர்ந்துள்ளனர்.

அப்போது நண்பர்கள் யார் அதிக மது குடிப்பார்கள் பார்க்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து நண்பர்கள் மதுக் குடிக்கும் போட்டி வைத்துள்ளனர். அதன்படி ஒரு ஃபுல் பாட்டில் மதுவை தண்ணீர் கலக்காமல் ராவாகக் குடித்துவிட்டு, தள்ளாடாமல் நிற்க வேண்டும் என்பதுதான் போட்டி.

அந்தப் போட்டியில் கலந்துகொண்ட சுபின் ஒரு ஃபுல் பாட்டில் மதுவை தண்ணீர் சேர்க்காமல் ராவாகக் குடித்திருக்கிறார். அதன்பின்னர் அவரால் தள்ளாடாமல் நிற்க முடியவில்லை. மது குடித்த சிறிது நேரத்தில் ஒரு கடைத்திண்ணையில் மயங்கிக் கிடந்தார். 

சுபினை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்
சுபினை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்

ஃபுல் பாட்டில் மது குடித்த சுபினுக்கு மயக்கம் தெளியும் என நண்பர்கள் சிறிதுநேரம் காத்திருந்தனர்.  இரவு வெகுநேரமாகியும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. பேச்சு மூச்சற்று கடைத்திண்ணையில் கிடந்த சுபினைத் தட்டி எழுப்ப முயன்றனர் நண்பர்கள்.

ஒருகட்டத்தில் சுபினிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதையடுத்து சுபின் இறந்துவிட்டதாகக் கருதினர் நண்பர்கள். ஏற்கனவே போதையிலிருந்த சக நண்பர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தனர். சுபினிடம் மதுக்குடிக்கும் போட்டி வைத்தவர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினர். 

மருத்துவமனையில் சுபின்
மருத்துவமனையில் சுபின்

பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக என்ன செய்யலாம் என யோசித்த நண்பர் ஒருவர், குளச்சல் போலீஸுக்கு போன் செய்து, கடைத்திண்ணையில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது சுபினின் உடலில் அசைவு தெரிந்தது. உடனே போலீஸார் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து சுபினை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க