செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு
கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
அப்போது கீழரத வீதியில் உள்ள வெங்கடகிருஷ்ணன் என்பவரது கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.