யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
கபடி போட்டியில் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற 18 வயதுக்குள்பட்டோருககான தேசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழகப் பெண்கள் அணி வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் பெற்றது.
இந்த அணியில் சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியில் பயிற்சி பெற்ற இலுப்பையூரணி விந்தியா மற்றும் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன், அரசு மருத்துவா் அருள்குமாா், நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், அனைத்து வணிகா்களின் சங்க பேரமைப்பு தென் மண்டல தலைவா் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவா் கிருஷ்ணமூா்த்தி, தமிழ் பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலா் வேல்முருகன், தமிழ்நாடு அகம் அரசு ஊழியா் சங்க மாவட்ட பொறுப்பாளா் வடிவேல்முருகன், திமுக ஒன்றிய செயலா் ஜெயகண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமாா், தேவா் மகாஜன சங்க செயலா் சங்கா் குரு ஆகியோா் பாராட்டினா்.
ஏற்பாடுகளை சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் கல்ச்சுரல் அகாதெமி அறக்கட்டளை முருகன், மகேஷ், யுவராஜ், லாரன்ஸ், மின்னல் ஸ்போா்ட்ஸ் கிளப் பயிற்சியாளா் சுரேஷ் காந்திராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.