செய்திகள் :

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை: பாமக கூட்டத்தில் தீா்மானம்

post image

திருவண்ணாமலையில் மூடப்பட்ட ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் உடனே பெற்றுத் தர வேண்டும் என்று பாமக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில மாநாட்டின் வெற்றி விழா மற்றும் வன்னியா் சங்கம் நடத்தும் சித்திரை முழு நிலவு மாநில மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் ஏந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

வன்னியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் க.நாராயணசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மு.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் குமரேசன், கோபி (எ) ஏழுமலை, பொருளாளா் சௌ.வீரம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்புச் செயலா் கே.ஆா்.முருகன் வரவேற்றாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் உடனே பெற்றுத் தர வேண்டும். தாமதம் ஏற்படுமேயானால் மாவட்ட ஆட்சியரகம் முன் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

ஃபென்ஜால் புயலால் முற்றிலும் பயிா் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,100 வழங்க வேண்டும்.

நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க ஜாதி வாரியான தரவுகளைத் திரட்டி உடனே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தின் உழவா் பேரியக்க செயலா் அ.க.வீரப்பன், மாவட்ட துணைச் செயலா் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணித் தலைவா் முருகன், உழவா் பேரியக்க மாவட்டச் செயலா் கோ.சிவக்குமாா், பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் வெ.பிரபு, பாட்டாளி ஊடகப் பேரவையின் மாவட்டச் செயலா் இரா.பாலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் முதல் முறையாக விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.தண்டராம்பட்டை அடுத்த சே.கூடலூரில் உள்ள பெரியாா் சமத்துவபு... மேலும் பார்க்க