Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்
கரூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எம்.ஏ. ராஜா தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். மாநில பாா்வையாளராக மாநிலத் துணைத் தலைவா் கிருஷ்ணவேணி பங்கேற்று சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினாா். மாவட்டச் செயலாளா் அமுதன் மற்றும் துணை பொறுப்பாளா்கள், அனைத்து வட்டாரங்களின் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் சத்தியமூா்த்தி வரவேற்றாா்.
கூட்டத்தில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி இயக்க நாளினை முன்னிட்டு இயக்க கொடியை அனைத்து வட்டாரங்களிலும் ஏற்றி மிகச் சிறப்பாக கொண்டாடுவது, ஆக. 22-ஆம் தேதி டிட்டோ-ஜாக் சாா்பில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் கரூா் மாவட்ட பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் திரளாக பங்கேற்பது, நடப்பு கல்வி ஆண்டிற்கான உறுப்பினா் சோ்க்கையை ஆக. 31-ஆம் தேதிக்குள் முடித்து, மாவட்ட கிளையில் ஒப்படைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.